ஞாயிறு, டிசம்பர் 30, 2012

வாசித்தலும் நேசித்தலும்


னைத்தையும்
வாசித்தல் நமது சுவாசமாக இருப்பினும்-அதிகம்
நேசிப்பது என்னவோ கவிதையை தான்.
கவிதையில் மட்டும் அப்படி என்ன காந்தம்.
ஏதோ இருக்கு ...............
இல்லாமலா எல்லோரும் நேசிக்கிறார்கள்.

இருந்தாலும் ஒரு சின்ன சின்ன வாசித்தல் அனுபவம் இங்கே....


செய்தி வாசிப்பவர்களை கண்டு சில சமயம்... சில என்ன,  பல சமயங்கள் வியந்து பார்த்தது உண்டு. சரள நடையில் திக்காமல் திணராமல் அப்பாடி..... அப்படி வாசித்துதான் பாருங்களேன்....தெரியும் கடினம்...

தாமஸ் ஆல்வா எடிசன் .
                       வகுப்பறை பலநேரங்களில் வாசித்தலை கடினமாக்கிய அனுபவம் உண்டு. ஆசிரியர் வாசிக்க சொன்னதும் மாணவர்கள் திக்கித் திணருவதும் ஆசிரியர் வைவதும் வாடிக்கை ஆகிவிட்டாலும் சில சிரிப்பனுபவங்கள் உண்டு. தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் பற்றி படிக்கும் போது ஒருவன் இப்படி படித்தான்....தாமஸ் அல்வா எடிசன்....அனைவரும் சிரித்தனர்......பிரிதொரு சமயம் ஒரு மாணவன் வாசித்தது அதைவிட கொஞ்சம் வித்தியாசம்.....தாமஸ் அல்லவா எடிசன்..
அடப்பாவிங்களா சிறந்த அறிவியல் அறிஞர் எப்படி பாடுபடுகிறார்...உங்கள் பொன்னான வாயில்..

வை கோ :


தினம் செய்தித்தாள் வாசித்தல் என்பது பள்ளிகளில் காலை இறைவணக்க கூட்டத்தில் ஒரு பகுதி... வை கோ அவர்களின் முழுப்பெயர்
வை. கோபால்சாமி என அநேகருக்குத் தெரிந்திருக்கும். பல வருடங்களுக்கு முன்பு  திரு  வைகோ அவர்கள் தனது பெயரை அப்படித்தான் பயன்படுத்தி வந்தார். காலங்கள் மாறிய பிறகு நியூமராலஜி பார்த்து பின்னர் தான் வைகோ என மாற்றிக்கொண்டார் போலும்.
செய்தித்தாளில் அவரைப்பற்றிய செய்தி ஒன்று வாசிக்க தேர்ந்தெடுத்து நண்பர் வாசித்தார்...செய்தித்தாளில் இடம் பூர்த்திக்காக சில எழுத்துக்களை அடுத்த வரிக்கு தள்ளி எழுதுவது உண்டு. அப்படி எழுதிய அவர் பெயரை வைகோ... பால்சாமி என படிக்க அனவரும் சிரித்து அடங்கினர்.....அதற்கு பிறகுதான் வைகோ வே தனது பெயரை சுருக்கி  வைத்துக்கொண்டார்....என்பது வேடிக்கை.

TIGER



ஆங்கில வார்த்தைகள் அனைவருக்கும் ஏறக்குறைய குழப்பம் தான் ....
ஆனால் சில எளிய வார்த்தைகள் கூட சில சமயம் காலை வாரி விடுவது உண்டு...அப்படித்தான் டைகர் டிகர் என வாசிக்கப்பட்ட கதை.
வகுப்பறையில் ஆசிரியர் வாசிப்பு பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார்..சக நண்பர் வாசிக்கும் பொழுது tiger ( டைகர் ) என்பதை டிகர் என வாசிக்க ....ஆசிரியரும் வாய்விட்டு சிரித்தார்....பின்னர் நண்பன் ஒரு சமயத்தில் இப்படி கேட்டார்... tiger என்பது டைகர் என்பது சரி...tig இதை வாசி என்றான். நான் டிக் என வாசிக்க..... அப்ப ti வந்தால் டி என தானே வரவேண்டும் டை எப்படி வரும்  tai வந்தால் தானே டை வரும் என அப்பாவியாய் விவாதிக்க நான் முழிக்க....ஆங்கிலத்தில் எழுதுவது ஒன்று வாசிப்பது ஒன்று....ரொம்ப மோசம் என்றான்....

திருப்பதி



புன்னியத்தலங்களில் ஒன்றான இப்பெயர் பட்டபாடு கொஞ்சம் நஞ்சம் 

அல்ல....ஒரு நாள் வகுப்பறையில் வாசித்தலின் போது நடந்தது...திருப்பதி

 என்பதை திருப்தி என வாசிக்கிறான் ...தலைகீழாய் நின்றாலும் வாயில்

 நுழையவில்லை...திருப்பதி என்ன பாவம் செய்ததோ....?

ஆசிரியருக்கே....!



ஆசிரியர்கள் அநேகம் பேர் மிகச்சரியான உச்சரிப்புடனே வாசிப்பார்கள். 

சிலர் உச்சரிப்பின்பொழுது அவர்களின் வட்டார சொற்களினைப்போல்  

உச்சரிப்புகள் மாறுபடும்...

அப்படி ஒன்று.

ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்க....... .பாடிக்காட்டினாள். என்ற 

வார்த்தை வந்தது. பாடிக்காட்டினாள்( பா என்பதினை அழுத்தி உச்சரிக்க ) 

அவர் உச்சரிப்பு எங்களை சிரிப்பில் ஆழ்த்தியது. ஆசிரியரும் எனக்கு 

அப்படித்தான் உச்சரிப்பு வரும் எது எங்கள் பகுதியில் பேசிபேசி 

வலக்கமாகிவிட்டது என்றார்..ழ உச்சரிப்பும் அப்படித்தான்.


ழ :

அனேகம் பேர் கொல்வது இந்த எழுத்தைத்தான்..மழை என்பதை மலை 

என்றே வாசிப்பதும்....... பழம் என்பதினை பலம் என்பது.....இதையே சிலர் 

ஸ்டைலா ஆக்கிகொள்வதும் உண்டு..சினிமா நடிகை நமிதா ஸ்டைலாக 

இருக்குமோ ?.....

விளையாட்டுக்காய் ஒன்று சொல்வது ஒன்று. சாப்பாடுப் போடப்படும் 

என்பதை பிரித்து பிரித்து இப்படிவாசித்தானாம்.
    
சாப்பா டுப்போ டப்ப டும்.

வாசரோஜா வாடிப்போலாமா ? இதை இப்படி வாசித்தால்...

வா சரோஜா வாடிப் போலாமா ?.......

மூ.தேவி என்பது மூதேவி எனவும், கு.ரங்கு....குரங்கு என்றும்

 வாசிக்கப்பட்டதாம். 

இது முற்றுப்புள்ளியை விட்டதால் வினை.

கண்டம் காண்டம் ஆனது துணைக்கால் போடக்கூடாத இடத்தில் 

போட்டதால் வந்தது.

பாம்பு பம்பு ஆனது துணைக்கால் விட்டதால்.......

இப்படி எதையும் விடாமலும்...... நாமாக எழுத்தை சேர்க்காமலும்...... சேர்க்க 

வேண்டியதை சேர்த்தும்...... பிரிக்க வேண்டியதை பிரித்தும்...... பொருள் 

மாறுபடாமல்......

சரியாக வாசிப்போம் சந்தோஷமாக வாழ்வோம்......

கால்புள்ளி....
அறைப்புள்ளி....
முற்றுப்புள்ளி.....
எல்லாம் சொல்லி தந்த பள்ளி.........
தள்ளி நின்று ரசிக்கையில்...
சொர்க்கம் தான்...
பள்ளி வயது அனுபவம்.




4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!