வியாழன், டிசம்பர் 20, 2012

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள்


       
 குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள்
 ன் பெயர் என்ன ?
அங்கே விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தையை கேட்டேன்.
சற்று யோசித்து விட்டு சொன்னது...தெரியாது
இதுவல்ல மேட்டர்....எனக்கு பதில் சொல்லிவிட்டு சக குழந்தையிடம் சொல்லியது....நான் கரைட்டா சொல்லிட்டேன் என்று அழகாக சிரித்தது. இது தான் மேட்டர்.
நானும் அருகில் இருந்தவரும் வாய்விட்டு சிரித்து விட்டோம்.
அவள் பெயரை சக குழந்தைகளிடம் விசாரித்த போது தான் தெரிந்தது கொஞ்சம் உச்சரிக்க சிரமமாகத்தான் இருந்தது எங்களுக்கும்.....
பக்கத்து குழந்தை அவள் பெயரை கூறியதும் “ஆங் அதான் என்று அப்புறம் ஆமோதித்தது.
வித்தியாசமான பெயர்கள் வைக்க வேண்டியது தான் அதற்கென்று.....அதிக வித்தியாசம் வேண்டாமே.
எனக்குத்தெரிந்த சில வித்தியாசமான பெயர்கள்....ரயில்,ஜெயில் வாட்டர்...
உண்மையிலே இப்படி பெயர்கொண்டவர்கள் நேரில் பார்த்திருக்கிறேன்.

ஒரே ஊர்ல ஒரே பெயர்ல நிறைய பேர் இருந்து குழப்புவார்கள்.
                                                    முருகன்,மணிகண்டன், பழனி,விக்னேஷ்,ஆரோக்கிய ராஜ்,ஆரோக்கிய தாஸ், சின்னப்பன்,சேகர்,அபிநயா.....இப்படி...

எங்க பள்ளியில் இப்படி ஒரு சிக்கல்
.வ.விக்னேஷ், வி.விக்னேஷ் இது பரவாயில்லை....சமாளிச்சுட்டோம்.

முரளி முரளி னு ரெண்டுபேர். அவங்க ரெண்டு பேரோட அப்பா பேரும் முருகன்...ரெண்டு பேருமே ஒரே வகுப்பு....
என்னத்த சொல்றது... அவங்க பேரோட கைதிங்க நெம்பர் மாதிரி அட்மிஷன் நெம்பரை அடிஷனலா சேத்து கூப்பிடறோம்...வேற வழி....


சில பேர் வாய் நிறைய கூப்பிட நீளமாக பேர் வைப்பாங்க....என் பெயர் இருதய ஆரோக்கிய ராஜ்.(இதை தான் இப்படி சுருக்க வேண்டியிருக்கு இஆரா..........

 உயர்திரு கலாம் அவர்களின் முழு பெயர் தெரியுமா உங்களுக்கு...


ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதின் அப்துல் கலாம்.....( அதை தான் நாம சுருக்கி கலாம், அல்லது APJ அப்துல் கலாம் ஆக்கிட்டோம்.) உலகம் போகிற வேகத்தில் ஒரு வார்த்தை ஒரு கோடி ஆகிவிட்ட நிலையில்.....
வாயில நுழையிற மாதிரி...... மாடர்ன் என்ற பெயரில் பெயர் வைக்காம சுருக்கமா சூப்பரா நல்ல தமிழ் பெயரா வையுங்க....

சொல்லத் தெரியவில்லை
சொந்தமான தன் பெயரை !
அடுத்தவர் சொன்னவுடன்
ஆமாம் என்று ஆமோதிக்கிறது.
சிரிக்க முடிகிறது;
சொல்லாத தன் பெயரை
தெரியாது என சொன்னதற்காக.!..
இது
மழலையில் மட்டுமே
முடிந்த மகத்துவம்.

எனக்குப்பிடித்த தமிழ் பெயர்......யாழினி.

இதைபோல.....

சுருக்கமா சூப்பரா நல்ல தமிழ் பெயரா வையுங்க....
வாழட்டும் தமிழ். வளரட்டும் பிள்ளைகள்.
வாழ்க வளமுடன்.

6 கருத்துகள்:

 1. அழகான தமிழ்ப்பெயர் சூட்டுங்கள் என்று சொல்கிறீர்கள்.

  அழகற்ற தமிழ்ப்பெயர்கள் இருக்கின்றனவா?

  இஃது எப்படியிருக்கிறதென்றால்,

  பாக்ய லட்சுமி என்று பெயர் வைத்தால், அபாக்ய லட்சுமி என்று உண்டா?

  லட்சுமி என்றாலே பாக்யம்தானே?

  தமிழ்ப்பெயர்கள் எல்லாமே அழகுதான். தமிழே அழகு என்றால் பெயரும் அழகாகத்தானிருக்கும்.

  யாழினி என்பது ஒரு அழகான பெயர் என்கிறீர்கள். சரி.

  அழகில்லா ஒரு தமிழ்ப்பெயர் பெண்ணிற்கு வைக்கமுடியுமா என்று நீங்கள் கேட்டுக்கொண்டால் நல்லது.

  மனிதர்களில்தான் இவர் வேண்டும்; அவர் வேண்டாமென்ற கெட்ட மனப்பாங்கு. தமிழ்ப் பெயர்களிலுமா ஆசிரியரே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உதாரணப் பெயர் சொன்னால் யராவது கோவிப்பாங்க,,,,,
   தமிழே அழகுதான்,,,,ஒப்புக்கொள்கிறேன்....வருகைக்கு ரொம்ப ரொம்ப... நன்றிங்க

   நீக்கு
 2. தமிழில் பெயர் வைப்பது நல்லதே.

  //ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதின் அப்துல் கலாம்..//

  இந்த பெயர் தமிழா என மட்டும் சொல்லவும் :-))

  வாயில நுழையிறா போல பெயர் வைக்கனும்னா வாழைப்பழம்னு தான் வைக்கனும் ...ஹி...ஹி இதை நான் சொல்லவில்லை 'கவுந்தமணி' சொன்னதுங்கோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது நீளமான பெயருக்கு உதாரணம்.வாயில நுழையிறா போல
   பெயர் னா உச்சரிக்க எளிதாக.....அந்த அர்த்தம்....தங்களின் பார்வைக்கும் பகிர்தலுக்கும் வந்தனங்கள்

   நீக்கு
 3. நல்லதுதான், வெளிநாட்டவர்கள் நம்ம பெயர்களை சரியான உச்சரிப்பு இல்லாமல் அழைக்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. மிகவும் உண்மை தான்.நாம அதிகம் வாழ்வது தமிழ் நாட்டில் தானுங்களே....
  தங்களின் பார்வைக்கு மிக்க நன்றிங்க.....

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!