திங்கள், நவம்பர் 19, 2012

சுற்றுச் சூழல் பாதுகாப்பு


           
                                சுற்றுச் சூழல் பாதுகாப்பு
             
             ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது

சூழல் மாசடைதல்
                                                என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுக்களால், சூழலின் வள ஆதாரங்களாகிய காற்று, நீர் மற்றும் மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களினதும், பிறவற்றினதும் சேர்க்கையினால் அல்லது வெளியேற்றத்தினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும்.

சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது. தற்பொழுது உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் சூழ்நிலை சீர்கேடும் ஒன்று என ஐக்கிய சபை அறிவித்துள்ளது[1]. சூழல் மாசானது சில வேதியியல் பதார்த்தங்களாகவோ, அல்லது வெப்பம், ஒளி, ஒலி போன்ற சக்திகளாலானதாகவோ இருக்கலாம். பல வேறு காரணங்களாலும்  சூழல் மாசடைகின்றது.

மாசடையும் முறைகள்

வளி மாசடைதல், நீர் மாசடைதல் , மண் மாசடைதல், கதிரியக்கப் பாதிப்பு ,ஒலிசார் மாசடைதல் , ஒளிசார் மாசடைதல் , காட்சி மாசடைதல் , வெப்பம்சார்மாசடைதல்   அணுக் கழிவுகளால் மாசடைதல், உயிரி-மருத்துவக் கழிவுகள்,இலத்திரனியல் கழிவுகள்.

வளி மாசடைதல்

பல்வேறு வகையான வேதியியற் பொருட்களும், தூசியும் வளிமண்டலத்துக்கு வெளியேற்றப்படுவதன் மூலம் வளி மாசடைகின்றது. தற்காலப் போக்குவரத்து ஊர்திகளாலும், தொழிற்சாலைகளாலும் வெளிவிடப்படும் காபனோரொட்சைட்டு, கந்தகவீரொட்சைட்டு, குளோரோபுளோரோகாபன்கள், நைதரசன் ஒட்சைட்டுகள் என்பன வளி மாசடைதலுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.

நீர் மாசடைதல்

நீர் சூழ்மண்டல சீர்கேடுநீர் மாசடைதல்|நீர் மாசடைதலில் தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், விவசாயப் பண்ணைகள், நகர்ப்புறக் கழிவுகள் என்பவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும், வடிகால்களிலும், வேறு நீர்நிலைகளிலும் கலந்துவிடுவதால் நீரின் தரமும், நீர் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் புவியின் நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.
மேலும் வளிமண்டலத்தில் கலக்கும் மாசுக்கள் மழைநீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் போன்றவற்றையும் மாசுபடுத்துகின்றன. எனினும் இவை முன் குறிப்பிட்டவற்றை விட குறைந்தளவிலேயே பாதிப்பைத் தருகின்றன.

மண் மாசடைதல்

மண் சூழ்மண்டல சீர்கேடுஇதற்கும், தொழிற்சாலைக் கழிவுகள் முக்கிய காரணிகளாக இருப்பினும், தற்கால வேளாண்மை முறைகளும் மண்மாசடைதலுக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன எனலாம். வேதியியல் உரங்கள், பூச்சிநாசினிகள், களைநாசினிகள் என்பனவற்றின் பெருமளவிலான பயன்பாட்டினால் மண் பெரிதும் பாதிக்கப்படுகிறது
  .சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக சணல் மற்றும் துணிப் பைகளை பயன்படுத்தும்படி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அறிவுறுத்திள்ளார்.
சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது பூமி, இயற்கைச் செல்வங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். இது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களிலும் சுற்றுச் சூழல் குறித்த பாடத்திட்டங்களை இடம் பெற செய்வது அவசியம்.
ஒலி மாசு (அல்லது சுற்றுசூழலில் மிகையான சத்தம்)
                                                என்பது மனதிற்கு ஒவ்வாத மனிதன்-, கால்நடைகள்- அல்லது இயந்திரங்கள் பிறப்பிக்கும் இரைச்சல் அல்லது ஓலியாகும், அது மனிதனின் வாழ்க்கை முறைகளையும், விலங்குகளின் வாழ்க்கை முறைகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் வெகுவாக பாதிக்கின்றது. பொதுவாக நம்மை இக்காலத்தில் வெகுவாக பாதிக்கும் ஓலி மாசு, இன்றைய சூழ்நிலையில் போக்குவரத்தின் காரணமாகும், குறிப்பாக தானுந்து, பேருந்து போன்ற மோட்டார் வாகனங்கள்.[1] ஒலி என்று பொருள் படும் ஆங்கில சொல்லான நாய்ஸ் என்ற வார்த்தை லத்தீன் மொழியில் நாசியா என்ற வார்த்தையை மூலமாக கொண்டது ஆகும், அதன் பொருள் கடலில் வாழ்வதால் ஏற்படும் ஏக்க நோய் ஆகும்.

உலகப் புவி நாள்.
ஆண்டு தோறும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் 1970ஆம் ஆண்டு அமெரிக்க சுற்றுச்சூழல் நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவரால் உருவாக்கப்பட்ட உலக புவி நாளாகும்.
இன்று நாம் சுற்றுச்சூழல் நாசம் பற்றிய பல்வேறு ஆய்வுத் தரவுகளையும், அதனால் ஏற்படும் அபாயங்களை‌யு‌ம் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக ஆர்ட்டிக் கடல் பகுதியில் பெருமளவு பனி உருகி அங்கு கப்பல் போக்குவரத்தும் கச்சா எண்ணெய் எடுக்கும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன. மீண்டும் முன்னணி நாடுகள் அங்கு தங்களது வணிக அராஜகங்களில் ஈடுபடத் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

சுமார் 18ஆம் நூற்றாண்டு மத்தியில் துவங்கிய மேற்கத்திய தொழிற்புரட்சி மற்றும் நவீனமயமாதல் நடவடிக்கைகளாலும், இரண்டு உலகப் போர்களில் பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதங்கள் ஆகியவற்றால் சுற்றுச்சூழலை நாசம் செய்து பூவுலகை நாசம் செய்தன. இரசாயன ஆயுதங்கள், அழிக்கப்பட்ட மரங்கள், செயற்கை உயிரிகள், வளர்ச்சி என்ற பெயரில் காடுகள் அழிப்பு போன்ற சுற்றுச்சூழல் நாச காரணிகளான பல நடவடிக்கைகளும் இன்று அண்ட வெளியில் வெப்ப வாயுக்களின் அளவை அதிகரித்து பூமியை வெப்ப மயமாக்கி வருகிறது.
திபெத்தின் உயரமான பனிமலை சிகரங்கள் மறைவதால் பிரம்மபுத்திரா போன்ற வற்றாத அகண்ட ஜீவ நதிகளும் இன்னமும் 40 ஆண்டுகளில் வற்றி பெருமளவு வறட்சியையும், பஞ்சத்தையும் நம் எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.

மனிதன் அண்டவெளியில் பயணம் மேற்கொண்டு பூமி பற்றிய செய்திகளை சேகரிக்க தொடங்கியவுடன், இன்று அண்ட வெளியில் மனித நடவடிக்கைகளாலும், இயற்கையின் இயல்பான போக்குகளாலும் ஏற்பட்டுள்ள மாற்றகள் பூமியை எவ்வாறு மாற்றியிருக்கின்றன என்ற செய்திகள் நம்மை அச்சுறுத்துவதாய் இருக்கின்றன.

மனித உற்பத்தி நடவடிக்கைகள், போர் மற்றும் இயற்கை அழிப்பு போன்ற அபாயச் செயல்களால் சூரியனில் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை பெரிதாகியுள்ளது. இதனால் துருவங்களில் பனி மலைகள் உருகி கடல் மட்டங்கள் அதிகரித்து வருகின்றன. கடலின் மேற்புற நீர் வெப்ப மயமாவதால் முன்பு போல் அல்லாமல் ஒரு சாதாரண புயலும் கூட மிகப்பெரிய புயல்களாக உருவாகி வருவதை நாம் ஏற்கனவே காத்தரீனா,  தானே போன்ற புயல்கள் ஏற்படுத்தியுள்ள நாசங்கள் மூலம் கண்டு வந்திருக்கிறோம்.

புவி வெப்பமடைதல் நடவடிக்கையின் கூடவே புவி குளிர்மயமாதலும் நடைபெற்று வருகிறது. ஆர்ட்டிக் பிரதேசத்தில் கடுமையாக பனி உருகி வருவதற்கு மாறாக அன்டார்ட்டிகா பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டுகளில் சற்றே பனி அளவு அதிகமாயிருப்பதாக பிரிட்டிஷ் அண்டார்ட்டிக் ஆய்வுக் குழுவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த இரண்டு எதிரெதிர் நடவடிக்கைகளாலும் பூமியில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்கள் பற்றி எதுவும் கணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரு புறம் ஓசோனில் விழுந்துள்ள ஓட்டை புவி வெப்ப மடைதலை துரிதப் படுத்தும் அதே வேளையில் அண்டார்ட்டிக்காவில் வெப்பமடைதல் நடவடிக்கையை அது கட்டுப்படுத்துவதாகவும் இந்த புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எனவே விஞ்ஞானிகளால் "நிகழ்வு" என்று வர்ணிக்கப்படும் இத்தகைய மாற்றங்களின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியாததாகி வருகிறது.
சுற்று சூழல் 
பறந்து , விரிந்து கிடக்கும்
உலகத்தில் - நாகரீகம்
நவீன மாற்றமென-
சுருங்கி கிடக்கும்
சுற்று சூழல் !
மாற்றம் எனும் பெயரில்
மாசுப்படுத்தாமல் இருப்போம் !
மனிதனால் நாசமடைந்த பூவுலகு மனிதனால் புத்துயிர்ப்பு பெறட்டும்.

.

4 கருத்துகள்:

 1. கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த குளச்சல் பகுதி!!!!


  சீரழித்து வரும் குளச்சல் நகரம்.

  வளரும் குப்பை நகரம்!
  வளர்க்கும் நகராட்சி!


  குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாக குப்பைகளை எடுத்து செல்லும் பணியை குளச்சல் நகராட்சி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது,

  இதனால் குளச்சல் குப்பை மேடாகி வருகிறது , இதனால் இந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது மேலும்
  கொசு தொல்லை தாங்க முடியாது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
  இதை குளச்சல் நகராட்சிக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும்
  பல்வேறு அமைப்பினர் புகார் செய்துள்ளார் ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!