வியாழன், நவம்பர் 29, 2012

தூண்டில்....(சொல்லாமல் விட்ட கதை)நீண்ண்ண்ண்ண்ண்ட.............................................நாட்களுக்குப்பிறகு நேற்று தூண்டில் போட்டேன்.( கிடைத்த மீன்களின் பட்டியல் பிறகு இறுதியில் பார்ப்போம் )
அப்பொழுது தலை தூக்கிய ஆசை....பதிவிடலாம்.
சில சுவராசியங்கள் மனதில் வந்துபோயின.....அவற்றுள் சில..

தாமரைக்குளம்:

எங்கள் இனிய கிராமத்தில் இருந்து சுமார் 4கிமீ தொலைவில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது தாமரைக்குளம்.
தாமரைக்குளம் என்பது காரணப்பெயர். வரலாறும் இணைந்தது.
திருக்கோவிலூரை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் அக்காலத்தில் இங்கிருந்துதான் தாமரை மலர்களை கொண்டு வரச்செய்தார்களாம். அதனால் இக்குளத்திற்கு இப்பெயர் வர காரணமாயிற்றாம்.
சரி மேட்டருக்கு வருவோம்.
நான் + மந்திரி அண்ணன் (இவர் தூண்டிலில் பல யுக்திகளை கையாலும் திறமைசாலி. என்னென்ன யுக்திகள் பின்னர் கூறுகிறேன்) மற்றும் நண்பர்கள் நான்கைந்து பேர் தூண்டில் போட அக்குளத்திற்கு கிளம்பினோம்.
அதிகாலை 4.1/2, 5 மணிக்கெல்லாம் நாங்க ரெடி என கதவை தட்டுவார்கள். தூக்கத்தில் கூட மீன் பிடித்த கனவுகள் வந்ததாக கூறுவார்கள் நண்பர்கள். நெடுநெடுவென நடக்க ஆரம்பித்தால் சூரியன் உதிக்கும் முன் அங்கிருப்போம். சில நாட்கள் குளத்திலிருக்கும்போது சூரியன் வரட்டும் அப்பதான் தூண்டில் போடமுடியும் ஒரே இருட்டாக இருக்கு என்று காத்திருப்போம்.
ஒருநாள் இப்படியாக சென்று தூண்டில் போடும்போது தான் அது நிகழ்ந்தது..
என் தூண்டிலின் தக்கை வேகமாக அசைந்தது .அடடா ஏதோ பெரிய மீன் மாட்டிவிட்டது என எண்ணிய நான் தக்க சமயத்திற்காக காத்திருந்தேன்.(விரால் மீனாக இருக்குமோ...இல்லை பெரிய கெண்டையாக இருக்குமோ....என் மனதில் ஆசை ஓடியது)
அண்ணே ஓடி வா என்னால் இழுக்க முடியவில்லை.இல்லடா நல்லா இழுத்துப்பாரு ....  இல்ல என்னால முடியல .... சீக்கிரம் ஓடிவா
“ஏதாவது செடியில மாட்டிக்கொண்டிருக்கும் என்னால் முடிந்த மட்டும் நான் இழுத்துப்பார்த்தேன் .....அது என்னையே இழுத்தது.....
அதற்குள் அண்ணன் வந்து உதவ இருவருமாக இழுத்துப்......பார்த்தால் மிகப்பெரிய.......ஆமை. அதிசயித்துப்போனார்கள் நண்பர்கள்.
ஆமை தூண்டிலில் மாட்டாது. எனக்கு மாட்டியது....அதை எடுத்து வந்தால் ஊரில் சிரித்தார்கள்......அதை வைத்து சிறுவர்கள் விளையாடிய பின்பு ஒரு கிணற்றில் விட்டுவிட்டோம்.
தூண்டிலில் புதிய யுக்திகள்:
                            அவர் இரண்டு தூண்டில்கள் போடுவார். ஒருவரே இருதூண்டில்கள் கையால்வது கடினம்.
ஒரே தூண்டிலில் இரண்டு முட்கள் இணைத்திருப்பார். அப்படியும் இரண்டு இரண்டு மீன்களாகப்பிடிப்பார். வழக்கமாக ஒரு தூண்டிலில் ஒரு முள் மட்டுமே இணைப்பார்கள்.

சாமியார் வீட்டு கிணறும் எனக்கு கிடைத்த சாபமும்.வழக்கம் போல அன்றும் தூண்டில் போட நண்பர்கள் பட்டாளம் கிளம்பியது கூடவே நானும். அழகிய வயல்வெளிகள், வரப்புகள், சேறு, வாய்கால் எல்லாம் தாண்டி வீர நடைபோட்டு சென்றோம். இன்னைக்கு சாமியார் வீட்டுக்கிணறு.

இதுவும் காரணப்பெயர்தான். 

                      கிருத்தவ பாதிரியார்களின்கிணறு. பாதிரியார்களை சாமியார்கள் என்று அழைப்பது வழக்கம்.
(டேய் தம்பி நேற்று சாமியார் வீட்டு கிணத்துல எல்லாரும் செம மீன் (இந்த வார்த்தையில தான் இருக்கு விஷயமே ) பிடித்தார்களாம்.
எல்லாம் கை கை அகலம் ஜிலேபி மீனாம். இப்படித்தான் அடுத்தவர்களை ஆசைக்காட்டி கம்பெனி குடுக்க அழைத்துப்போவோம்.
நல்லாதான் போயிட்டு இருந்தது. நேரம் ஆக ஆக மீன் பிடித்தலும் அதிகம் ஆனது..... திடீரென என் தக்கை அசைவது நின்று போனது.... என்ன ஆச்சு..?.....  வெளியே இழுத்துப்பார்த்தால் தூண்டிலின் முள்ளினைக்காணோம். “டேய் என் தூண்டில் முள்ளையே காணோம்டா....அது எப்படிடா நல்லாதானே கட்டியிருந்த”  “ஆமாண்டா அப்பதான் அந்த எக்ஸ்பர்ட் சொன்னார் தம்பி நண்டு வந்து கொடுக்கால கத்தரித்து விட்டுட்டு இருக்கும்.... “போச்சுடா”...........


அப்புறம் என்ன.......வேறு யாரிடமும் எக்ஸ்ட்ரா....... ஸ்பேர்பாட்ஸ்....... இல்லை....
வெறுங்கையுடன் வெகுசீக்கிரம் வீடு வந்து சேர்ந்தேன்.

*அப்ப எல்லாம் தூண்டிற்கு போகும்போது எக்ஸ்ட்ரா முள் போன்றவை எடுத்துச்செல்வதில்லை.அனுபவம் கிடைத்தவுடன் அதிலிருந்து எல்லாமே எக்ஸ்ட்ராவாக எடுத்துசெல்வது அனைவருக்கும் வழக்கமாகிவிட்டது.

இதுதான் அனுபவம் தந்த பாடம் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்களோ?


துரிஞ்சல் ஆத்துல செம மீன் :

                  
வழக்கம் போல ஏய் செய்தி தெரியுமா தோமினி எல்லாம் போய் துரிஞ்சல் ஆத்துல செம மீன் பிடிச்சுனு வந்தார்களாம். நாமளும் போலாமா ? ஏய் அது ரொம்ப தூரம்  எப்படி பஸ்ல தூண்டி எடுத்துப்போனா கேவலமா பாப்பாங்களே.... என்ன செய்யலாம்?  சரி, சைக்கிளில் போகலாமா ?  ஓகே இது நல்ல ஐடியா ! ஐந்தாறு நண்பர்கள் அன்று இரவே முடிவு செய்து விட்டோம்.  
துரிஞ்சல் ஆறு என்பது தென்பெண்ணை ஆற்றின் கிளை நதி. எங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 15கிமீ தொலைவில் உள்ளது. பிளான் படி அதிகாலை எல்லாரும் கிளம்பியாயிற்று.....
 தூண்டில் போட்டால் நன்றாக கொத்துது ( மீன் பிடித்து இழுக்கும்பொழுது தக்கை நன்றாக அசைவதைஅப்படிச்சொல்வார்கள்.) ஆனா கிடைக்க மாட்டேங்குதே அது எப்படி ?.........
காத்திருந்து காத்திருந்து நேரம் ஆனது  தான் மிச்சம்..... சில பேர்க்கு செல்லாகாசு மீன் (இது ஒருவகை சிறுமீன் ) தான் ஒன்று இரண்டு பிடித்தது.
வெருத்துப்போன நண்பன் ஒருவன் “இனிமே மீன் பிடிக்க எங்காவது கூட்டீங்க கொலையே விழும் என்று மடமடவென தூண்டில் குச்சியை உடைத்து ஆற்றில் வீசிவிட்டு நான் கிளம்பறேன் என்றான்.... மற்றவர்களும் கிளம்ப டேய் இம்மாம் தூரம் வந்து சும்மா போவானேன் பக்கத்தில் திருக்கோவிலூர் சென்று விக்ரம் (கமல் நடித்தது. அப்பொழுதுதான் ரிலீஸ் ஆகியிருந்தது)  படம் பாத்துட்டுப்போலாம் என்று கூற அப்படியே செய்யலாம் என்று ஓட்டலில் சாப்பிட்டு விட்டு படம் பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
அப்ப தான் எஸ்பர்ட் சொன்னார்கள் : 
                                    செல்லா காசு மீன் புழுவை மட்டும் நன்றாகத் திண்ணும் ஆனா மாட்டாது தம்பி. தோமினி போய் பாத்துட்டு வந்துட்டான். ஆனா கிடைக்கல...... (தோமினிக், குமார் எல்லாம் நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள்.ஊர் ஊராக சென்று மீன் பிடித்து வருபவர்கள்) தோமினியை பார்த்து அப்புறம் கேட்டால் விழுந்து விழுந்து சிரிக்கிறார்......அங்கியா போனீங்க ஆத்துல செம மீன் புடிச்சு இருக்குமே.?????....!!!!!!!!...
அடப்பாவிங்களா ! இந்த ஒரு வார்த்தையை வச்சி தாண்டா இந்த ஊரையே ஏமாத்திரிங்க.......அலைய விடரீங்க.......


·         ஒரே நேரத்தில எல்லாத்தையும் சொன்னா உங்களுக்கு கடுப்படிக்கும் எனவே பின்பு
.....................................தொடரும்......
வர இருப்பவை.....


*பெரிய ஏரியும் பஜனைக்கோவில் திருவிழாவும்.


              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!