ஆனாலும் ஆர்த்தி நீ
ரொம்ப மோசம்....
திருமண வைபவங்கள்
முடிந்து சற்று ரிலாக்ஸ் ஆன நேரம். ஆர்த்தியின் தோழிகள் மணமக்களை
சூழ்ந்துக்கொண்டு.... “ஆனாலும் ஆர்த்தி நீ ரொம்ப மோசம்” என
கோரஸ் போட ஆர்த்தி சும்மா இருங்கடி என சற்றே வெட்கப்பட்டாள்.
மணமகன் வழக்கம் போல முழித்துகொண்டு
“என்ன” என்றான். ஆர்த்தி ஒண்ணும் இல்ல சும்மா என்றாள்...
“நான் சொல்லவா” ஒருத்தி கேட்க... “ஏய் வேணாம்” என ஆர்த்தி அவசரமாக அவளை தடுத்தாள். என்னப்பா
யாராவது சொல்லுங்க என்றான் மாப்பிள்ளை.
சொல்ல ஆரம்பித்தாள்
தோழி.........
ஒரு நாள்..
“ஏய் இந்த பீரியட்
லெக்ஸரர் வரமாட்டார்டி?
என்ன பண்ணலாம்?
“வாங்கடி
மரத்தடிக்குப் போவோம்”
“ஏய் கேண்டீன் போலாம்
எனக்குப் பசிக்குதுப்பா”
“நீ செலவு பண்றீயா
நாங்க வரோம்”
“சரி வந்து தொலைங்க”
ஹேமா வின் செல்
சிணுங்க....
“யார்டி உன் ஆளா ?”
“ஆமாம்பா”
“செல்ல தூக்கினு
தூரப்போ....... அப்படியே நாசமாப்போ”....
“ஏன்டி லவ் பண்றது தப்பா?”
“ஆமாம்னும்
சொல்லலாம். இல்லணும் சொல்லலாம்....”
“இவ ஒரு குழப்பவாதி
போடி இவளே..”
-கேண்டீன்-
“எனக்கு பஜ்ஜிப்பா”
“எனக்கு பிஸ்கட்”
“தோடா இது குழந்தை
இன்னும் பிஸ்கட் திண்ணுனுகீது”
அனைவரும் சிரிக்க....
“எனக்கு சமோசா”
“எனக்கு
எல்லாத்துலயும் ஒன்னுஒன்னு”
“இவ வீட்டுக்காரன்
தின்றதுக்கு வாங்கிப்போட்டே போண்டியா போவப்போரான்’
“ஆமா ஆண்டியா ஓடாம
இருந்தா சரிதான்”
குபீர்
சிரிப்புகள்.......
“ஏய் இந்தாப்பா
எனக்கு பஜ்ஜி போதும்”
யாழினி வேண்டாம் என
மறுத்தாள்.
“ஏய் அன்பா கொடுக்கிறாப்பா
வாங்கிக்க”
அவ அன்பா
கொடுக்கலனாலும் நான் வாங்கிப்பேன் என அதை பிடுங்கித்தின்றாள் வர்ஷா.
“ஆமா, அன்பா கொடுத்தா எதை வேணும்னாலும் வாங்கிக்கலாமா?”
“ஏன்
வாங்க்கிக்ககூடாது?”
“அது இல்லப்பா”
“வாங்கிக்கலாம்”
இப்ப இவ வாங்கிக்குவா
பாரு என உதட்டில் பச்சென்று முத்தமிட்டாள்.
“அட நாராயணா அவ ஆளு
பார்த்தான் உன்னை கொன்னே போட்டிடுவான்
அவன் ரொம்ப
சென்ஸிட்டிவ் பா”
ஓ வென அனைவரும்
கூச்சலிட்டனர்...
“நான் அன்பா கொடுத்தா
நீ எதை வேணும்னாலும் வாங்கிப்பியா?”...
“கொடேன்”
யாரும் எதிர் பாராத
தருணம்...
ஆர்த்தி கைகளை
உயர்த்தி அவள் கன்னத்தில் பளார் என அறைந்தாள்.
அடி சற்று பலமாகவே
பட்டு கன்னத்தில் விரல்கள் பதிவு தெரிந்தது.
வர்ஷாவின் கண்களில்
கண்ணீர் ......
அனைவரும் சைலண்ட்....
“சாரிப்பா
விளையாட்டுக்குதான் அடித்தேன்.”...
“இன்னாதான்
இருந்தாலும் இப்படியா அடிக்கிறது”
“அதான் சாரி சொல்லிட்டா
இல்ல...விடுங்கடி.”..
வர்ஷாவின் அழுகை
தேம்பலாக மாறியது...
“சாரிடி நீ தானே
சொன்ன அன்பா கொடுத்தா எதை வேணும்னாலும் வாங்கிக்கலாம்னு ....தமாஷ்க்கு தான்
அடிச்சேன்பா வலிச்சிடுச்சா ?”
வர்ஷா நிமிர்ந்தாள்.கண்களைத்
துடைத்துக்கொண்டாள்.
“ச்சீ நீ ரொம்ப மோசம்”
“ஆமாண்டி"- ஒருவள்
“ஆனாலும் ஆர்த்தி நீ
ரொம்ப மோசம்”...இன்னொருவள்.
“ச்சீ அதான் நானே
சொல்லிட்டேனே”...என்ற வர்ஷா ஆர்த்தியின் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
அன்பு வென்றது.
“அன்பு இருந்தா
எதையும் தாங்கிக்கலாம் வாங்கிக்க கூடாது” என்று ஒருவள் கூற....
மீண்டும் அங்கே
சிரிப்பு குடிகொண்டது.
அதுல இருந்து இவபேரு
‘ஆனாலும் ஆர்த்தி நீ ரொம்ப மோசம்’...தான்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!