புதன், மார்ச் 28, 2012

அந்தோணி முனியே


அந்தோணி முனியே
அன்பர்கருள் புரிவாய்
அந்தோணி முனியே
    1
செந்தா மலர் பாதத்தை
சிறுவர்கள் பாடி வந்தோம்
செய்த பாவத்தைப் போக்க
சேவித்து இங்கு வந்தோம்
சேசுவை வேண்டி எம்மைக்காரும் – நாங்கள்
செய்த பாவங்களைத்தீரும்
சிறுவர் பாடினோம் கருணைத்தந்திட
வருவாய் இத்தினம்
   2
பஞ்சப்பிணியால் நாங்கள்
பாவிகள் வாடுகிறோம்
பாராமுகம் ஏனோ
பக்தரே அந்தோணியே
பட்சம் வைத்து எங்களை நீர் காரும் – இந்த
பாருலகில் நல்மழையைத் தாரும்
சிறுவர் கூடினோம் கருணைத்தந்திட
வருவாய் இத்தினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!