என் தோட்டத்து
புல்லுக்குக் கூட
புழுங்குகிறதாம்
தென்றல் நீ வராததால்.
பூவினம் கூட நாற்றமடிக்கிறது -நீ
வாசனை வழங்க வராததால்.
நிலவு கூட
நின்று பார்த்துவிட்டுப் போகிறது
நீ வந்துள்ளாயா என்று.
என் வீட்டு நாய் கூட உன்னை காணாததால்
சோம்பலாகி உட்கார்ந்து விட்டது.
புல்லுக்கும் பூவிற்க்கும்
நிலவிற்கும் நாய்க்கும் கூட
நீங்காத நினைவைத் தந்தவளே !
உன்னை காணாததால் நான் எப்படி இருப்பேன் என்று
உனக்குத் தெரியாதா ?.
நம் வாழ்வில் ஒருபோதும்
பிரிவு வேண்டாம் கண்ணே
பரிவு பாசம் மட்டுமே வேண்டும்
உடனே நீ வருவாயா.....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!