புதன், ஜூலை 01, 2015

ஹெல்மெட்(helmet)



 

சின்ன டிப்ஸ்:- 

ஹெல்மெட்அதிக நேரம் அணியும் பொழுது தலையில் கர்சிப் கட்டிக்கொண்டு அணிந்தால் வியர்வையால் தலையில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம்.
 .................................................................................................................................................




போலீஸ்:- வெரிகுட் சார், சொன்னவுடனே சரியா ஹெல்மெட் போட்டுனு வண்டி ஓட்டுறீங்க இந்தாங்க லட்டு எடுத்துக்கோங்க.


நபர்:- முக்கியமா 3 னே காரணம் தான் சார்.

போலீஸ்:- நல்லது சொல்லுங்க எல்லோரும் தெரிஞ்சிக்கலாம்.

நபர்:-1.என்கிட்ட லைசென்ஸ் இல்ல.    2.இன்ஸ்சுரன்ஸ் கட்டல.  3.ஆர் சி புக் தொலைஞ்சிப்போச்சி.


போலீஸ்:- ????????
......................................................................................................... ...................................................


நபர்1:-  ஹெல்மெட் வாங்கினது எவ்ளோ நல்லதா போச்சு தெரியுமா?


நபர்2:-  என்னாச்சு ? உங்க உயிரையே காப்பாத்திச்சா? அது பெரிய
விஷயம் இல்லையா.....!



நபர்1:- அட அது இல்லீங்க..... போலீஸ்காரர்கிட்ட இருந்து என் காசை காப்பாத்துச்சு.

.................................................................................................................................................. 


வடிவேல்:- ஹெல்மெட் போடாம போலீஸ் இடம் இருந்து தப்பிக்க ஒரு சூப்பர் ஐடியா... இருக்கு பாஸ்.


விஜய்:- சொல்லுடா


வடிவேல்:-    வண்டியை வீட்டுல விட்டுட்டு நடந்தே போவோம்

அப்புறம் எப்படி நம்மைய பிடிப்பாங்கனு பாப்போம் பாஸ்.


 விஜய்:- ஜம ஜம ஜம.........

 ................................................................................................................................................







காரணம்.

தமிழகத்தின்
தலையாய பிரச்சனை
தலைக்கவசம்
இல்லாமல்
வண்டி
ஓட்டுவதில் இல்லை.
தண்ணியடிச்சிட்டு
வண்டி ஓட்டுறது தான்.



 வணக்கங்கள் கலந்த நன்றிகளுடன்.....

5 கருத்துகள்:

  1. வணக்கம்
    எல்லாம் அருமையாக உள்ளது... முகமூடித்திருடர்களின் நடமாற்றம் அதிகம்.இனி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. உண்மையைச் சொல்லிட்டீங்க உங்கள் பாணியில்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  3. எல்லோரும் சீரியசாக ஹெல்மெட் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கும் போது, நீங்கள் அதைப்பற்றி நகைச்சுவையாகத் தொடங்கி சில பயனுள்ள ஆலோசனைகளுடன் முடித்து விட்டீர்கள். நன்றி.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  4. உண்மையே ! நகைச்சுவையுடன் உள் குத்துடன் நல்ல ஆலோசனையையும் வழங்கி இருக்கின்றீர்கள்! மிகவும் ரசித்தோம்...நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!