சனி, மார்ச் 07, 2015

படித்ததில் பிடித்தது...



 
சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தபொழுது ஒரு மனநல மருத்துவமனையை பார்வையிடசென்றாராம். ஒரு மனநல நோயாளி “நீங்கள் யார்?“ எனக்கேட்க சர்ச்சில் “நான் இந்த நாட்டின் பிரதமர்” என்றாராம். அதற்கு பலமாக சிரித்த அந்த நோயாளி... “கவலைப்படாதீங்க நானும் இங்கு வந்த புதிதில் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்....போகப்போக எல்லாம் சரியாயிடும்”
அதை கேட்டு அதிர்ச்சியடைந்துவிட்டாராம் சர்ச்சில்.
..............................................................................................


 
“வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடைபெற்ற நேரம்... இங்கிலாந்தில் பிரதமர் சர்ச்சில் அவங்க நாட்டின் பாராளுமன்றத்தில் இப்படி பேசினாராம். “ இந்த காந்தி துப்பாக்கி ஏந்தி போரிட்டால் நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன், பீரங்கி கொண்டு போரிட்டால் நான் விமானங்கள் கொண்டு அழித்திருப்பேன், ஆனால் அவரோ ஆயுதங்களை புறக்கணித்து அகிம்சை,சத்தியம்  இவற்றைக்கொண்டு போராடுவதால் அதனை மழுங்கடிக்க வேறு ஆயுதங்கள் இல்லை.... நமக்கு பணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.... “
....................................................................................................................
 
ஐன்ஸ்டீன்......பெரிய அறிவியல் அறிஞர். ஒருமுறை ஹோட்டலுக்கு சாப்பிடச்சென்றாராம்...சப்ளையர் மெனு கார்டை கொடுக்க, இவருக்கு கண்ணாடி இல்லாமல் படிக்க முடியவில்லை...அதனால் “நீயே படித்துச்சொல்” என கூற, அதற்கு அந்த சப்ளையர் “நானும் உங்களை மாதிரி எழுத படிக்கத்தெரியாதவன்தாங்க”
ஐன்ஸ்டீன் ????
...........................................................................................................................
 
 ஹிட்லர் கடுகடுப்பிற்குப்பெயர்போனவர்.  ஒருமுறை மனநல மருத்துவமனையை பார்வையிடச்சென்றாராம்... நோயாளிகள் அனைவரும் "ஹிட்லர் வாழ்க" என கோஷம் போட பயிற்சியளித்து அப்படியே செய்ய வைத்தார்களாம்.... அப்போது ஒருவர் மட்டும் அமைதியாக இருக்க என்ன நடக்க போகிறதோ என அதிகாரிகள் திகிலுடன் இருக்க..... கோபமான ஹிட்லர் “நீ ஏன் கோஷம் போடவில்லை?” என்றாராம். அதற்கு அந்த ஆள்  நான் மன நோயாளி இல்லை இந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் என்று பயத்துடனே கூறினாராம்.... அதன்பின் மீண்டும் ஒருமுறை அந்த டாக்டரை முறைத்து விட்டுச்சென்றாராம் ஹிட்லர். ஹிட்லர் சென்ற பிறகு இதனை நினைத்து அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.
.................................................................................................................
 
சார்லி சாப்ளின் ஒருமுறை நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஒரு ஈ அவரின் தலையையே சுற்றி சுற்றி வந்து தொந்தரவு செய்துக்கொண்டிருந்ததாம்.பலமுறை துரத்திப்பார்த்த சாப்ளின் கடுப்பாகி ஈ ஓட்டும் மட்டையை எடுத்து வரச்சொல்லி அடித்து சாகடிக்க காத்துக்கொண்டிருந்தாராம். சிறிது நேரத்தில் அவரின் மேசையின் மேல் ஈ வந்து அமர உற்றுப்பார்த்த அவர் அதனை கையால் துரத்தி விட்டாராம். ஆச்சர்யப்பட்ட நண்பர் “அடித்து சாகடிக்க வேண்டியது தானே” என கேட்க சாப்ளின் சர்வசாதாரணமாகச்சொன்னாராம், “என்னை தொந்தரவுச்செய்த ஈ இது அல்ல. இது வேற ஈ.”
...............................................................................................................
 
 ராக்பெல்லர் என்ற அமெரிக்க பெரும்பணக்காரர் ஒருவர் . ஒருமுறை வாஷிங்டன் சென்றபோது மிக சாதாரண கட்டண அறையில் தங்கினார்... இதை கண்ட ஹோட்டல் மேனேஜர் “சார் உங்க பையன் வந்தால் மிக அதிக கட்டணமுள்ள அறையிலேயே தங்குகிறார் நீங்களோ மிக சாதாரண வாடகைஅறையில் தங்குகிறீர்களே?” என கேட்க  ராக்பெல்லர் இப்படிச்சொன்னாறாம் “அவனால் அது முடியும். அவங்க அப்பா பெரிய பணக்காரர். எனக்கு அப்படி இல்லையே“. ....................................................................................................................................

6 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை நண்பரே கடைசியாக சொன்ன ராக்பெல்லரின் தத்துவத்தை நமது நாட்டில் பல சினிமா நடிகர்கள் சொல்லி, தான் சொன்னது போல் ஆக்கி கொண்டதை நினைத்தால் எனக்கு சிப்புசிப்பா வருது
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. பணம்........!!!!பணம் ........!!!!!!அபாரம்.................!!!!!!!!!,அற்புதம் ..................!!!!!!!,கண்டிப்பாக பகிரவும்!
    facebook கை வீழ்த்திய tsu வலைத்தளம், facebookil ஒண்ணுமே கிடைக்காது , tsu வில் மகிழ்ச்சியுடன் பணமும் கிடைக்கும், facebook ம் twitter ம் இணைந்ததுதான் tsu,தேவையில்லாத போஸ்ட் களை போடமுடியாது ,பாதுகாப்பானது ,ஆயிரகணக்கான தமிழர்கள் உள்ளனர்,tsu வில் இதுவரை எங்களுக்கு கிடைத்த பணம் ரூ 9,800/- , மாதம் 300 டாலர்கள் வரை சம்பாதிக்க வாய்ப்பு ,கீழே உள்ள ரெபரல் கோடை கிளிக் செய்து எங்களுடன் இணைந்துகொள்ளலாம்,இது FACEBOOK ஐ விட அட்வான்ஸ் ஆனது , android ilum பயன்படுத்தி கொள்ளலாம் (இங்கே க்ளிக் செய்யவும் ). tsu.co/nataraja

    பதிலளிநீக்கு
  3. மிக மிக அருமையான பதிவு நண்பரே!

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!