செவ்வாய், ஜூன் 10, 2014

கதம்பம்

                              சிரிப்பிற்கு...

 சின்ன தவறு  பெரிய பாடம்.


"     அட!     'ஒன்னு 'போட மறந்ததுக்கா உன்னை சஸ்பெண்ட்       செஞ்சுட்டாங்க ?"


"ஆமாம்பா அடுத்த பிரான்ஞ்சுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணவேண்டிய
'செக்'ல ஒருலட்சத்துக்கு ஒன்னுபோட மறந்துட்டேன்"


( "பின்ன வெறும் முட்டையா போட்டா கோபம் வருமா வராதா?" )

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 



 சிந்தனைக்கு...


படிக்காத மேதை      (யார்முட்டாள்?)





வாக்குச்சாவடியில்
அநேகம் பேர்
வரிசையில் நிற்பதால் 
அவசர அவசரமாக 
ஓட்டுப்போட
டாக்டர் பட்டம் வாங்கிய 
நடப்பு  எம் எல் ஏ
தேர்தல் அதிகாரியிடம்
கைநாட்டு வைத்துவிட்டுப்போனார் .
வழக்கம்போல.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 


அம்மா

மகனோ மகளோ
 ஓட்டப்பந்தயத்திற்கு
செல்லும்போதுக்கூட
பார்த்து  மெதுவா ஓடுடா 
என்பாள் தாய்.


அவளுக்கு 
விருதுகள் முக்கியம் அல்ல.
பிள்ளை
விழுந்துவிடக்கூடாதே 
என்பது தான் 
முக்கியம்.
 ................................

அடிவாங்கியப்பிள்ளை 
சிரித்துக்கொண்டிருக்க
 ஏனோ 
அடித்த அம்மா 
அழுதுகொண்டிருப்பாள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

 பணம்

பணம் புத்திசாலிகளுக்கு அடிமை 
முட்டாள்களுக்கு எஜமானன்.
..............................................................................
 பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது
பணம் இல்லையென்றால் உன்னை யாருக்குமே தெரியாது. 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 


8 கருத்துகள்:

  1. /// அடித்த அம்மா அழுதுகொண்டிருப்பாள்... ///

    அருமை,,,

    பதிலளிநீக்கு
  2. ''பணம்'' அருமை நண்பரே.....
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. கதம்பம் அருமை !
    அதிலும் தாய் கவிதை அழகு!

    பதிலளிநீக்கு
  4. கவிதைகக்ல் அனைத்தும் அருமை.
    சூப்பர் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!